ஆழியார் அணை நிரம்பியது: 11 மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் ஆழியார் அணை நிரம்பியது. பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை இன்று முழு கொள்ளளவை எட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1210 கன அடி உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது.



அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதையடுத்து அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆழியார் ஆற்று கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில், ஆழியார் அணை முதலில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...