ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வு மற்றும் மக்களை ஏமாற்றும் திட்டம் என குற்றம்சாட்டினர்.


Coimbatore: கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், "திராவிட மாடல் அரசு இலவச வீடு திட்டம் போல ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது" என்று குற்றம்சாட்டினார். மேலும், இத்திட்டத்தில் ஒரு சதுர அடிக்கான அனுமதி கட்டணம் ₹44லிருந்து ₹88 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவை சிதைக்கும் செயல் என்றும் கூறினார்.



அதிமுக உறுப்பினர் பிரபாகரன் மேலும் தொடர்ந்து, "இந்த ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை அரசு திரும்பப் பெறாவிட்டால், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த தர்ணா போராட்டம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...