உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்: வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்பு

உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.வி.புரம் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

நிகழ்வில், உடனடி தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களை பயனாளிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் வழங்கினர்.



முன்னதாக, கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் துறை மற்றும் பல்வேறு துறை அரங்குகளில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர். அதிகாரிகள் மனுக்களின் தன்மையை ஆய்வு செய்து, பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மனு அளிக்க வழிகாட்டினர்.

முகாம் நடைபெறுவது குறித்த தகவல் துண்டு பிரசுரங்கள் மூலம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் வீடுகளுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து மனுக்களை அளித்தனர்.

இந்நிகழ்வில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், விவேகானந்தன், கார்த்திகேயன், கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தெய்வானை, மலர்விழி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சிபாய், சுப்பிரமணியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...