யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் - கோவை நீதிமன்றம் உத்தரவு

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், மற்றொரு வழக்கில் அவர் சிறையில் தொடர்ந்து இருப்பார்.


Coimbatore: கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவன CEO பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த மே 14-ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோவை குற்றவியல் நான்காவது நீதிபதி முன்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, சிறையில் உள்ள சவுக்கு சங்கரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதி சரணவனபாபு முன்பு நடைபெற்றது. விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கருக்கு சாதாரண நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்திருந்தாலும், மற்ற வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பது தெரிகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...