கோவை செல்வபுரத்தில் கஞ்சா விற்ற பெண் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை செல்வபுரத்தில் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, 49 வயது பெண் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்வபுரம் போலீசார் நேற்று (ஜூலை 25) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு பெண்ணை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அந்தப் பெண் முரண்பட்ட பதில்களை அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவரின் மனைவி பர்ஹத் நிஷா (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பர்ஹத் நிஷாவின் மகன் அப்துல் கலாம் (25) மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...