பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததால், 20,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மன்னார்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, நேற்று இரவு முதல் பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஜூலை 26 காலை நிலவரப்படி சுமார் 20,000 கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. நேற்று வரை 85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 93 அடியாக உயர்ந்து, பின்னர் 97 அடியை எட்டியது.



அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் 20,000 கன அடி தண்ணீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வருவதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...