நீலகிரியில் வீட்டின் கூரையை உடைந்து உள்ளே விழுந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைந்து குட்டி யானை வீட்டுக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோழிபாலம் பகுதியில் வசித்துவருபவர் தவுபிக், இவரது மனைவி ஜெமீலா. அப்பகுதயில் சாலையோர மலைச் சரிவுக்குட்பட்டு வனப் பகுதியில் இத்தம்பதியினரின் வீடு உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் உறங்கிக்கொண்டிருக்கையில் திடீரென வீட்டின் கூரையை உடைத்து ஒரு யானைக் குட்டி உள்ளே விழுந்துள்ளது. இதனைக்கண்ட ஜெமீலா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். 



இதனிடையே வீட்டுக்குள் விழுந்த குட்டி யானை, வீட்டை விட்டு வெளியேற முறச்சித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதில் ஜெமிலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில், தனது குட்டியை தேடி வந்த தாய் யானை, மேலும் சில யானைகளுடன் வீட்டின் வெளியே நின்றது. யானைக் கூட்டத்தைப் பார்த்து பதற்றமடைந்த ஜெமீலா மற்றும் அவரது மாமனார், மாமியார் மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர்.



வெளியே நின்ற யானைக் கூட்டம், வீட்டின் சமையல் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று தனது குட்டியை மீட்டது. தொடர்ந்து, அந்த யானைக் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.



இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் கணேசன் மற்றும் வன ஊழியர்கள் ஜெமீலாவின் வீட்டை ஆய்வு செய்தனர். பின், கூடலூர் மருத்துவமனையில் காயமடைந்த ஜெமீலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...