கோவையில் திமுகவினர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத்தில் திமுகவினர் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக கூறி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கோவை டாடாபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 27 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், கோவை சிவானந்தா காலனி டாடாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.



கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், BLA-2, பூத்கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 5,000க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை புறக்கணித்து, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக கூறி பாஜக ஒன்றிய அரசை கடுமையாக கண்டித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...