காளப்பட்டியில் மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது

கோவை காளப்பட்டியில் 80 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து தாக்கி 3 பவுன் நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த நகை மீட்கப்பட்டது.


கோவை: கோவை காளப்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த நஞ்சம்மாள் (80) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் பகலில் தனியாக வீட்டில் இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

காயமடைந்த நஞ்சம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது.

தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையின் பின்னர், காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நதியா என்ற நர்மதா (23) மற்றும் அவரது காதலன் காளப்பட்டியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (28) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், நர்மதாவின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றதால், விக்கியுடன் காதல் ஏற்பட்டு அப்பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. செலவுக்குப் பணம் இல்லாததால் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர். கைதானவர்களிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூலை 26 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...