வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கூட்டத்தில், வணிகர்கள் கொலை மற்றும் கடைகளில் கொள்ளை அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்தனர். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் தெரிவித்ததாவது, "கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூரில் ஒரு வணிகர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."



"மேலும், GST அதிகாரிகள் வணிகர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்," என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர். "இதனைத் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்களின் ஆதார் தரவை தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்," என்று அவர்கள் வலியுறுத்தினர்.



"இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தமிழக அரசு விரைவாக தீர்க்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்," என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...