கோவை கார் பந்தயத்தில் கேரள மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பில் கேரள மருத்துவர் பிரேம்லால் மாரடைப்பால் உயிரிழந்தார். பந்தயத்தின் போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கோவை எல் அண்டி பைபாஸ் சாலை அருகே ஜூலை 27 அன்று தொடங்கின. இப்போட்டியில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் பிரேம்லால் (46) பங்கேற்றார்.

போட்டியின் போது, மதியம் 1.30 மணியளவில் அரை மணி நேர சர்வீஸ் பிரேக் விடப்பட்டிருந்தபோது, காரில் இருந்து இறங்கி வரும் பிரேம்லாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பிரேம்லால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரேம்லால் செட்டிநாடு ஸ்போர்டிங் அணிக்காக மருத்துவர் ரிஷிகேஷுடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்றார். கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரேம்லால், பல முக்கிய கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரது மனைவி ஸ்மிஜா அரவிந்தும் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு விஷ்ணு மற்றும் அனிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவம் பிரேம்லாலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கார் பந்தயத்தில் பங்கேற்ற அனைவரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்லாலின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், முதல் நாள் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...