கோவையில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு

கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.மோகன் கட்டிடத்தை திறந்து வைத்தார்.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.மோகன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்து, சங்கம் சார்பில் செய்த சாதனைகள் குறித்து பேசினார்.

மாவட்டத் தலைவர் ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில கெளரவத் தலைவர் விஜய்நடராஜ், வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம், முன்னாள் கெளரவத்தலைவர் ராமானந்த், கெளரவத்தலைவர் சீதாராமன், மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



மறைந்த டி.வி.நடராஜன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிருபர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் மோகன், தமிழகத்தில் ஒன்னரை கோடி ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருவதாகவும், சுமார் 40 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 90 சதவீத சாகுபடி இடுபொருட்களை அவர்களது சங்கமே வழங்கி வருவதாகக் கூறினார்.

மாவட்டப் பொருளாளர் செந்தில் கந்தசாமி 2017-23 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் டாக்டர் அப்புக்குட்டி ஆண்டறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இறுதியாக தண்டபாணி நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...