கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது. குவாரிகள் மீண்டும் இயங்கினால் விவசாய குடும்பங்கள் பாதிப்படையும் என எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி அளித்த மனுவில், மதுக்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்பட்ட கல்குவாரிகள் தடைசெய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவற்றை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த கல்குவாரிகள் மீண்டும் இயக்கப்பட்டால், அதன் அருகாமையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இத்தகைய கல்குவாரிகளை இயக்க நடக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்றும், புதிதாக அனுமதி கோரும் இத்தகைய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



பழனிசாமி மேலும் கூறுகையில், முதற்கட்ட நடவடிக்கையாக இதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளதாகவும், விதி மீறல்கள் ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு சென்று அத்தகைய விதி மீறல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சினை தொடரும் பட்சத்தில் விவசாயிகள் வேறுவிதமான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...