செல்போனை 5 நிமிடங்கள் அணைத்து வைப்பதன் மூலம் கார்பன் பயன்பாட்டை குறைக்க முடியும் - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.


Coimbatore: கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று ஜூலை 29 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், சுற்றுச்சூழலை பாதுகாக்க செல்போன் பயன்பாட்டின் மூலம் வெளியேறும் மாசுபாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனது செல்போன்களை அணைத்து வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



வானதி சீனிவாசன் தனது உரையில், "சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உலக நாடுகளோடு ஒப்பந்தம் செய்து பிரதமர் மோதி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்க அதிக அளவு மரங்களை நட வேண்டும். அதற்கான நிதியாக தனது சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த தயாராக உள்ளதாகவும்" தெரிவித்தார்.



செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வானதி சீனிவாசன், "1 கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின் திட்டம் கொடுக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் ஒழிப்பில் மக்கள் பங்களிப்பு இருந்தால் தீர்வு காண முடியும்" என்றார்.

மாநகராட்சி நிர்வாகம் குறித்து பேசிய அவர், "மாநகராட்சி நிர்வாகத்தில் பிரச்சனை உள்ளது. ஒரே நாளில் 333 தீர்மானங்கள் நிறைவேற்ற அவசியம் என்ன? மக்களிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். மாநகராட்சி செயல்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும்" என்றார்.



மேலும், "திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது மக்களுக்குத் தெரியும். திமுகவின் அரசியல் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. கொலை குற்றங்களை தடுக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதிகாரிகளை மாற்றுவது நடவடிக்கை இல்லை. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது என்கவுண்டர் தீர்வு கிடையாது" எனத் தெரிவித்தார்.

அரசியல் சந்திப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "சீமான் அண்ணாமலை சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்கட்சிகள் என்பது எதிரி காட்சிகள் கிடையாது. ஒருவரை பார்த்துக் கொள்ளும் போது நலம் விசாரித்து வரவேற்க கூடியது" என்றார் வானதி சீனிவாசன்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...