கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு: கல்லீரல் பாதிப்பால் மரணம்

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருட்டு வழக்கு கைதி சாதிக் பாஷா (41) கல்லீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் திருநகர் காலனி பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா (41) என்பவர் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜூன் 24ஆம் தேதி சாதிக் பாஷாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக அவர் கோவை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், ஜூலை 5ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், கல்லீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 28) சாதிக் பாஷா உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை கைதியின் மரணம் குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...