கோவை கவுண்டம்பாளையத்தில் நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்த 50 வயது நீதிமன்ற ஊழியர் சந்திரசேகர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம் தெரியவில்லை.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (50) என்பவர் கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூலை 28) அவரது மனைவி பூங்கொடி, மகள் மற்றும் மகனுடன் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக சந்திரசேகரின் மனைவி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகரின் மனைவியும் குழந்தைகளும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...