கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவினருக்கான நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

கோவை TNAU-வில் 2024-2025 கல்வியாண்டிற்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கையின் பொதுப்பிரிவு நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 31 அன்று நடைபெறுகிறது. 868 இடங்களுக்கான இந்த சரிபார்ப்பு அண்ணா அரங்கத்தில் நடத்தப்படும்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) 2024-2025 கல்வியாண்டிற்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், TNAU, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU), மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகியவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான இணையதள வழி கலந்தாய்வு ஜூன் 23 முதல் 26 வரை நடைபெற்றது. தற்போது, TNAU-வில் பொதுக்கல்விப் பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 31, 2024 அன்று நடைபெறவுள்ளது. இந்த சுற்றில் மொத்தம் 868 இடங்களுக்கான சரிபார்ப்பு நடத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதி அடிப்படையில் தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களான 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் TNAU வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணிற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்கள் மூலம் வாரநாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...