ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் ஆண்டு விழா

கோவை பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை வெர்டிகல் மனித வள மேம்பாட்டுத் தலைவர் எம்.செந்தில்குமார் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்பொது அவர் பேசுகையில், “வெளிநாட்டின் வெர்டிகல் நிறுவனத்தில் பணிபுரியும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களை வெகுவாகப்பாராட்டினார். மேலும் இக்கல்லூரியின் பல மாணவர்களை வெர்டிகல் நிறுவனத்தில் பணிபுரிய அழைப்புவிடுத்தார். 

மாணவர்களாகிய நீங்கள், உங்கள் மனதிற்கு முழு திருப்தியளிக்கக் கூடிய துறையைத் தேர்ந்தெடுங்கள். மேலும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். படித்தலும் தெரிந்துகொள்ளுதலும் வாழ்நாள் முழுதும் அவசியம். பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக்கொண்டு அறிவைப் புதுப்பித்தால் தான், உங்கள் துறையில் வெற்றி பெற முடியும்” என்றார்.

எஸ்என்ஆர் அறக்கட்டளையின் கல்வி இயக்குனர் முனைவர் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை உரையாற்றினார். உரையின் முடிவில், கல்லூரிப் படிப்பை 2017ல் நிறைவு செய்யும் மாணவர்களில் சிறந்தமாணவர் பி.ஷேர்ஐின் மற்றும் சிறந்த மாணவி கே.பப்புபிரித்தி ஆகியோருக்குத் தங்கப்பதக்கங்கள் வழங்கி கெளரவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கல்லூரி முதல்வர் பால்ராஜ், சென்ற ஆண்டில் நிகழ்ந்த சாதனைகள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். தொடர்ந்து, சென்ற ஆண்டில் ஒவ்வொரு வகுப்பிலும் தகுதிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...