கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபரை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.


கோவை: கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக்கை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.

கோவை உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்த ஜாபர் சாதிக் (35) பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

ஜூலை 28 அன்று, ஒருவர் ஜாபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்தார். வீட்டு முன்பு நின்றிருந்த இருவர் அரிசி கடத்தல் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினர். அப்போது மேலும் 5 பேர் காரில் வந்து, ஜாபர் சாதிக்கை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

பாலக்காடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் காரை நிறுத்தி, ஜாபர் சாதிக்கை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 23,000 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டனர். அரிசி கடத்தல் சம்பந்தமாக வெளியே சொன்னால் தொலைத்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து ஜாபர் சாதிக் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (37), கோவைப்புதூரை சேர்ந்த தவ்பிக் (39), கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமத் அசாருதீன் (35) ஆகிய மூவரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜியா, ஜாகீர், அன்வர், அஜீஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...