டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 2024: பரிசளிப்பு விழா மற்றும் கண்காட்சி கோவையில் நடைபெற்றது

கோவையில் டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 2024 பரிசளிப்பு விழா நடைபெற்றது. 25 நாடுகளிலிருந்து 1538 பேர் பங்கேற்றனர். புகைப்பட கண்காட்சி ஆகஸ்ட் 4 வரை நடைபெறும்.



கோவை: லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்.எம்.டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி (DJMPC) 2024-ன் பரிசளிப்பு விழா கோவையில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் 30 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகம் முழுவதும் 25 நாடுகளிலிருந்து 1538 பேர் பங்கேற்று 6464 படங்களை சமர்ப்பித்தனர்.



போட்டிக்கான பதிவுகள் 2024 மே 1 முதல் ஜூன் 30 வரை www.djmpc.in வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. டெல்லியை சேர்ந்த ராஜேஷ் பேடி, சிங்கப்பூரை சேர்ந்த ஜெயினி மரியா மற்றும் ஜெயபிரகாஷ் போஜன் உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தன. கே. மருதாச்சலம் போட்டியின் ஆலோசகராகவும், விக்ரம் சத்யநாதன் நிர்வாகியாகவும் செயல்பட்டனர்.



இந்த ஆண்டு "இயற்கையின் புதுமை" மற்றும் "wild portraits" என இரு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.

"இயற்கையின் புதுமை" பிரிவில் மும்பையைச் சேர்ந்த டாக்டர். திலிப் ஷா முதல் பரிசையும், சென்னையைச் சேர்ந்த கணபதி ராம் ஆர்.எஸ் இரண்டாம் பரிசையும் வென்றனர். "wild portraits" பிரிவில் கேரளா காயம்குளம் பகுதியைச் சேர்ந்த டாக்டர். மகேஷ் முதல் பரிசையும், கனடா நாட்டைச் சேர்ந்த தாமஸ் விஜயன் இரண்டாம் பரிசையும் வென்றனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு, எல்.எம்.டபிள்யு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும். தொடர்ந்து, புகைப்பட கண்காட்சி ஆகஸ்ட் 4, 2024 வரை நடைபெறும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...