கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவை மற்றும் நீலகிரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூலை 30 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இரண்டு மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள், மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதியும் கனமழை பெய்யும் என்று கூறி மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...