கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு

கோவை - பகத் கி கோத்தி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக கோவை - பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்.06181 கோயம்புத்தூர் - பகத் கி கோத்தி வாராந்திர சிறப்பு ரயில் (வியாழக்கிழமைகளில்) ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை (9 சேவைகள்) இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 2.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை பகத் கி கோதி-யை காலை 11.30 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண்.06182 பகத் கி கோதி - கோவை சிறப்பு ரயில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு பகத் கி கோதியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயிலில் ஏசி 3-அடுக்கு, ஏசி 3-அடுக்கு எகானமி, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள் இருக்கும்.

ரயில் நின்று செல்லும் இடங்கள்: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யர்ரகுன்ட்லா, கூடி, தோன், கர்னூல் சிட்டி, மஹ்பூப் நகர், கச்சேகுடா, காமரெட்டி, நிஜாமாபாத், முட்கேட், நந்தேட், பூர்ணா, ஹிங்கோலிம், டெக்கான், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், ஜலோர், மொகல்சர் மற்றும் சம்தாரி.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...