உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு, ஒன்றிய பாஜக மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார்.



ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.R.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் A.பஞ்சலிங்கம் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், தோழன் ராஜா, வசந்தி, ஜஹாங்கீர் ஆகியோர் உரையாற்றினார்கள். முன்னதாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த போராட்டம், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...