கோவை சிங்காநல்லூர் அருகே செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு

கோவை சிங்காநல்லூர் அருகே, செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்த 22 வயது இளைஞர் அஸ்வின் குமார், ரயில் மோதி உயிரிழந்தார். காதில் இயர்போன் அணிந்திருந்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


கோவை: கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே உள்ள தண்டவாளத்தில் இன்று (ஜூலை 30) காலை, இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தொடக்கத்தில் இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை. ஆனால் தண்டவாளம் அருகில் கிடந்த ஒரு மணிப்பர்ஸ் மற்றும் ஏடிஎம் கார்டின் மூலம், கோவையில் உள்ள வங்கியுடன் தொடர்பு கொண்டு கணக்கு வைத்திருப்பவரின் பெயரை உறுதி செய்தனர். இதன் மூலம் இறந்த இளைஞர் கோவை சௌரிபாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் (22) என்பது தெரிய வந்தது.

விசாரணையில், அஸ்வின் குமார் அன்று காலை காதில் இயர்போன் அணிந்து கொண்டு செல்போனில் பேசியபடி சென்றபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அஸ்வின் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காதில் இயர்போனை அணிந்து கொண்டு பேசியபடி சென்ற இளைஞர் ரயில் மோதி இறந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...