ஏப்ரல் 25ம் தேதியன்று முழு அடைப்பு போராட்டத்தில் பங்கெடுப்பது என சிபிஐ கோவை கிழக்கு மண்டல முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) கிழக்கு மண்டல முதல் மாநாடு கோவை பாலன் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவளித்து ஏப்ரல் 25ம் தேதியன்று முழு அடைப்பில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் முழுமையாக பங்கெடுப்பது. நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை மாநகரம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் இரவு 9 மணிக்கு மேல் பேருந்து நிலையம் அருகில், டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்த இடத்தில் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களை மறைத்துவைத்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த பகுதியில் பொதுமக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் நடமாட வேண்டி உள்ளது. எனவே, கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பேருந்து ஓட்டுபவர்களுக்கும், ஆம்னி பேருந்து ஓட்டுபவர்களுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. எனவே, ஆம்னிப் பேருந்துகளை நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் நிறுத்தப்படும் ஆம்னிப் பேருந்துகளை அப்புறப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். எஸ்.ஐ.எஸ்.எச்.காலனி., பீளமேடு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு ஹவுசிங் யூனிட் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஒதுக்கித்தரவேண்டும். ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...