முன்னாள் படைவீரர்களுக்கு சொத்துவரி திருப்பி அளிப்பு - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு செலுத்தும் சொத்துவரியை திரும்பப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சலுகை வழங்கப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் குடியிருக்கும் ஒரு சொந்த வீட்டிற்கு செலுத்தும் சொத்துவரியை முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக மீளப்பெற்றிட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி முன்னாள் படைவீரர் செலுத்தும் வீட்டுவரி ஒரு வருடத்திற்கு (2 அரையாண்டு) அதிகபட்சமாக ரூ.10,000/- அல்லது செலுத்தப்பட்ட தொகை இதில் எந்த தொகை குறைவோ அந்த தொகையினை, வீட்டுவரி செலுத்திய நாள் முதல் 6 மாத காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். அவரது சொந்த வீட்டிற்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். முன்னாள் படைவீரர் வருமானவரி செலுத்துபவராக இருத்தல் கூடாது. இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் மறு வேலைவாய்ப்பு முறையில் அரசுத்துறைகளில் நிரந்தரமாக பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த சலுகைக்கு தகுதியற்றவர்கள்.

மேலும், வீட்டுவரி செலுத்தப்படும் வீடு முன்னாள் படைவீரரின் பெயரில் மட்டுமே இருத்தல் வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட நாளான 27.02.2024-க்கு பிறகு 2023-24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிற்கு செலுத்திய வீட்டுவரி முதல் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் செலுத்திய வீட்டுவரி தொகையினை மீளப்பெற விரும்பினால், வீட்டுவரி செலுத்திய அசல் இரசீது, அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன் நேரில் வந்து உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...