கோவை TNAU-வில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி: ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் நடைபெறுகிறது

கோவை TNAU-வில் ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. பல்வேறு உணவு பொருட்களை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளலாம்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி வரும் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இந்த பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு வகையான தயார்நிலை உணவுகளை தயாரிக்கும் முறை கற்றுத் தரப்படும். இதில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ், பிசிபெல்லா, பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ் ஆகிய உணவு பொருட்கள் அடங்கும்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தொகையை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 94885 18268, 0422-6611268. மின்னஞ்சல்: [email protected].

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...