ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி: காவல் துறை துணை ஆணையர் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர காவல்துறை துணை ஆணையர் ரோஹித் நாதன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: கோவையில் உள்ள லட்சுமி மில்ஸ் அர்ப்பன் சென்டரில் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவின் சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை கோவை நகர காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) ரோஹித் நாதன் துவக்கி வைத்தார். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசாமி தலைமை தாங்கினார். மருத்துவமனையின் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர், ஜி.கே.என்.எம். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



துணை ஆணையாளர் ரோஹித் நாதன், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு துவங்கி வைத்தார். அவர் பேசுகையில், "நாட்டில் சாலைகள் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பால் விபத்துகள் அதிகரித்துள்ளன. உயிர்களைக் காப்பாற்ற உடல் உறுப்பு தானம் மிகவும் முக்கியம். அதிக மக்களை உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் நிறைய உயிர்களை காப்பாற்றலாம்," என்றார். மேலும், பயணம் செய்யும்போது சாலையில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.



Nephrologist மருத்துவர் ராமச்சந்திரன் கூறுகையில், "உடல் உறுப்பு தானத்தில், கண்களை மட்டுமே இறப்பிற்குப் பிறகு எடுக்க முடியும். மற்ற உறுப்புகளை இதயத்துடிப்பு இருக்கும் போது மட்டுமே எடுக்க முடியும். மூளைச்சாவு ஏற்படும் போது மூளை செயலிழந்தாலும் இதயம் இயக்கத்தில் இருக்கும். அப்போது உடல் உறுப்புகளை எடுக்க முடியும்," என்றார். உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவரின் ஒப்புதல் மட்டுமின்றி, இறப்பிற்குப் பின் குடும்பத்தாரின் ஒப்புதலும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.



இந்திய உறுப்பு தானம் தினமான இன்று (03.08.2024) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, உறுப்பு தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை களையும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அதிக மக்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தால், அவர்களது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தால், நிச்சயமாக பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...