வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது: பணப் பிரச்சினையே காரணம் என எஸ்.பி. தகவல்

கோவை செட்டிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே கொலைக்கு காரணம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.


Coimbatore: கோவை செட்டிபாளையம் அருகே நேற்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து விவரங்களை வெளியிட்டார்.

கொலை வழக்கில் 8 தனிப்படை போலீசார் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கோவையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் அய்யனார் என்ற செல்வம் மற்றும் கௌதம் ஆகியோர் வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர் என்றும் கூறினார்.



பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வாக்குவாதம் முற்றியதால், செட்டிபாளையம் அருகே காரை நிறுத்தி அய்யனாரின் நண்பர்களான அருண்குமார் மற்றும் அபிஷேக் ஆகியோரை வரவழைத்து, காரில் வழக்கறிஞருடன் சென்ற அய்யனார், கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் வழக்கறிஞர் உதயகுமாரை கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் கார், இரு சக்கர வாகனம், அரிவாள் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மட்டுமே இந்த கொலைக்கான காரணம் என்றும் எஸ்.பி. பத்ரி நாராயணன் உறுதிபட தெரிவித்தார்.



மேலும், இந்த ஆண்டு கொலை வழக்குகள் குறைந்துள்ளதாகவும், சமூக ஊடகங்களை கண்காணிக்க தனிக் குழுக்கள் இருப்பதாகவும் எஸ்.பி. கூறினார். கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...