நிரந்தர கடைகள் கோரி பாதணி தயாரிப்பாளர்கள் ஆட்சியரிடம் மனு

கோவையில் டாக்டர் அம்பேத்கார் பாதணி தயாரிப்பாளர்கள் நலச் சங்கத்தினர் 50 ஆண்டுகால தொழிலுக்கு நிரந்தர கடைகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.


Coimbatore: கோவையில் டாக்டர் அம்பேத்கார் பாதணி தயாரிப்பாளர்கள் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், மாநகராட்சி நிர்வாகம் மூலம் நிரந்தர கடைகள் அமைத்து தர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சங்கத்தினர் தங்கள் மனுவில் கூறியுள்ளதாவது: "கதர் கிராம தொழில் வாரியத்தால் வழங்கப்பட்ட இரும்பு பெட்டியில் வைத்து கடந்த 50 ஆண்டுகளாக பாதணி தயாரிக்கும் மற்றும் பாதணி பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறோம். முதலில் கோவை அரசு மருத்துவமனைக்கு அருகில் தொழில் செய்து வந்தோம். பின்னர், இரயில்வே பாலம் கட்டுமானத்தின்போது கடைகள் அகற்றப்பட்டு பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் தொழில் செய்தோம்."



"செம்மொழி மாநாடு நடைபெற்றதால் அங்கிருந்தும் கடைகள் அகற்றப்பட்டன. தற்போது கோவை நஞ்சப்பா ரோடு ஜெயில் ரோட்டில் கடை நடத்தி வருகிறோம். இப்போது அந்தப் பகுதியில் செம்மொழி பூங்கா வேலைகள் நடைபெறுவதால், எங்கள் கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என அஞ்சுகிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர கடைகள் அமைத்து தங்கள் குடும்பங்கள் வாழ வழிவகை செய்து தர வேண்டும் என்று பாதணி தயாரிப்பாளர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...