கோவை பீளமேடு: தொழிலதிபர் வீட்டில் 43 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை பீளமேடு பகுதியில் தொழிலதிபர் மோனிஷ் ராஜனின் வீட்டில் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


கோவை: கோவை பீளமேடு, சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜின் மகன் மோனிஷ் ராஜன் (27) வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் மோனிஷ் ராஜன், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது தாயாருடன் தாராபுரத்தில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மோனிஷ் ராஜன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தமிழரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி திருடர்கள் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் பீளமேடு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...