பொள்ளாச்சி மதுபானக் கடையில் இளைஞர் கத்திக்குத்தில் பலி: இரு சந்தேக நபர்கள் கைது

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் 22 வயது இளைஞர் கத்திக்குத்தில் உயிரிழந்தார். சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள மதுபானக் கடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கத்திக்குத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22) என்ற இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொள்ளாச்சியில் வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நள்ளிரவு, அரவிந்த் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த விமல் (22) மற்றும் பைசல் (33) ஆகியோருக்கும் அரவிந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. தகராறு கைகலப்பாக மாறியதில், விமல் மற்றும் பைசல் ஆகிய இருவரும் அங்கிருந்த கத்தியால் அரவிந்தைக் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்து சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற விமல் மற்றும் பைசல் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...