கோவை TNAU-வில் இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை அறிவிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி 300 இடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-2025 கல்வியாண்டிற்கான இளநிலை வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான 6வது கட்ட சேர்க்கை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) (AU) ஆகியவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு (Academic Stream) மற்றும் 7.5% இடஒதுக்கீட்டிற்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23 முதல் 26 வரை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கல்விப் பிரிவில் (Academic Stream) ஏற்பட்ட காலியிடங்களுக்கு 6வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 8 (வியாழக்கிழமை) அன்று 300 இடங்களுக்கு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதி அடிப்படையில் தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களான 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் கோவை TNAU வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணிற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது சந்தேகங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலோ வாரநாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என TNAU நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...