கோவை மருதமலை பகுதியில் யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

கோவை மருதமலை சுற்றுவட்டாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை இரவு நேர கண்காணிப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இது பகுதியில் யானை-மனித மோதல்களைத் தடுக்க உதவும்.


கோவை: கோவை வனச்சகரத்திற்கு உட்பட்ட மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, வனத்துறை சார்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, இரவு நேரத்தில் பணியாற்றும் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு குழுவினர், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற முடியும் என்பதோடு, யானை-மனித மோதல்களையும் தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...