கோவை TNAU-வில் பட்டயப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

கோவை TNAU-வில் பட்டயப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும். விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு கட்டணம் மற்றும் சேர்க்கை கட்டணம் செலுத்த வேண்டும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) பட்டயப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 9, 2024 அன்று இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ரூ.200 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது உண்மையான மேல்நிலைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றை சான்றிதழ் சரிபார்ப்பின் போது முதன்மையர் (வேளாண்மை) அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு, விண்ணப்பதாரர்கள் சேர்க்கை கட்டணமாக ரூ.5,000-ஐ ஆகஸ்ட் 9, 2024 அன்றே பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகவோ அல்லது ஆகஸ்ட் 11, 2024 தேதிக்குள் இணையவழியாகவோ செலுத்த வேண்டும். இணையவழி கட்டணம் செலுத்த http://tnaqfi.ucanapply.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்கள் அல்லது சேர்க்கை கட்டணம் செலுத்தத் தவறியவர்களின் சேர்க்கை இரத்தாகும். இவ்வாறு இரத்தான இடங்கள் அடுத்தடுத்த இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் இடஒதுக்கீட்டை இழந்தவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது.

மேலும் விவரங்களுக்கு 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களையோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என TNAU நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...