கோவையில் நடைபெற்ற 5-வது Manufacturing Automation மாநாடு: தொழில்துறை மாற்றத்திற்கான அடிப்படை விவாதிப்பு

கோவையில் CII ஏற்பாட்டில் 5-வது Manufacturing Automation மாநாடு நடைபெற்றது. தொழில் மாற்றம், தானியங்கி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.


கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் Manufacturing Automation மாநாட்டின் 5-ஆம் பதிப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (06/08/2024) நடைபெற்றது.



'Key to Business Transformation' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பல்வேறு முன்னணி தானியங்கி (ஆட்டோமேஷன்) தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

தானியங்கி மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவைகள் மூலம் தொழில் வளர்ச்சி, தயாரிப்பு நிறுவனங்களின் எதிர்கால முன்னேற்றம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் விளக்க உரைகளும் கலந்துரையாடல்களும் இம்மாநாட்டில் இடம்பெற்றன.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) கோவை மாவட்ட சேர்மன் ராதாகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அவர் தனது உரையில், தானியங்கி (ஆட்டோமேஷன்) செயல்படுத்துவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், தொழில்களுக்கு பொருத்தமான தானியங்கி சேவையை மதிப்பீடு செய்து அறிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.



Mori Seiki India Pvt Ltd இயக்குநர் Takashi Yuasa, சுற்றுச்சூழல் நிலைத்த தன்மையோடு இருக்கும் வகையில், பல இயந்திரங்களின் பயன்பாட்டை குறைத்து ஒரே தானியங்கி சேவைக்கு மாறுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

Multivista Global Pvt Ltd நிறுவனத்தின் துணைத் தலைவர் (Smart Manufacturing Solutions) ஸ்ரீநாத், ஆட்டோமேஷனை பொருத்தவரை கோயம்புத்தூர் முன்னணியில் இருந்து வருவதாகக் கூறினார். தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அவர், செயற்கை நுண்ணறிவு வேலை இழப்புக்கு வழிவகுக்கும் என்பதை மறுத்து, அது திறன் மிகுந்த வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.



மாநாட்டின் தலைவரும் Effica Automation நிறுவனத்தின் முழுநேர இயக்குநருமான அர்ஜுன் பிரகாஷ், நகரப் பகுதியில் தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதில் ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்தார். மேலும், இத்தகைய தொழில்நுட்பங்களை இயக்குவதற்கு திறமையானவர்களின் அவசியம் குறித்தும், அத்தகைய திறன் மிக்கவர்களின் மையமாக மாற கோவைக்கு இருக்கும் திறன் குறித்தும் அவர் விளக்கினார்.



இந்த மாநாட்டில் Robotics & Material Handling, IoT and Digitalization, Cost Economics and Quality in Automation உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. Rockwell Automation, Kawasaki Robotics, Mori Seiki India, Renishaw, Adna Automation உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் விளக்க படங்கள் மூலம் எடுத்துரைத்தனர்.

மாநாட்டின் நிறைவாக, கோவையைச் சேர்ந்த ZF Wind Power, Lakshi Life Science, மற்றும் Sieger Spintech Equipments ஆகிய மூன்று நிறுவனங்கள் digitalization மற்றும் Industry 4.0 தொழில்நுட்பங்களை தங்கள் நிறுவனத்தில் செயல்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...