கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பின் அகில இந்திய கருத்தரங்கம் - தலைவர் துளசிதரன் தகவல்

கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பின் 6வது அகில இந்திய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பருத்தி விலை உயர்வு, உற்பத்தி குறைவு, ஏற்றுமதி சவால்கள் குறித்து விவாதிக்கப்படும் என தலைவர் துளசிதரன் தெரிவித்தார்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அலுவலகத்தில் இந்திய பருத்தி கூட்டமைப்பு தலைவர் துளசிதரன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.



இதில் அவர் கூறியதாவது:



இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் கருத்தரங்கம் 9ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த கருத்தரங்கில் பஞ்சு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். பல்வேறு நாடுகளில் இருந்து பருத்தி தொடர்பான விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க இருக்கின்றோம்.

தற்போது இந்திய பஞ்சு விலை அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளில் விலை குறைவாக உள்ளதால், இந்திய ஜவுளித்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பருத்தி தொடர்பான உலகளாவிய அறிவுகளுடன் திரும்பி செல்ல முடியும். இது இந்திய பருத்தி கூட்டமைப்பின் ஆறாவது கருத்தரங்கமாகும்.

தற்போது பருத்தி ஒரு கண்டி 57,000 ரூபாய் விலையில் உள்ளது. பருத்தி உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகமாக உள்ளது. பருத்தி விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் பலரும் கையிருப்பு பருத்தியை விற்காமல் வைத்திருக்கின்றனர்.

பஞ்சாலை தொழில் கடந்த ஆண்டு மோசமாக இருந்தது. இந்த ஆண்டு சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. பங்களாதேசத்தில் குழப்பமான சூழல் நிலவுவதால் திருப்பூருக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், பங்களாதேச மற்றும் வியட்நாம் ஜவுளிக்கு அமெரிக்காவில் வரி குறைவாக உள்ளது. இந்தியாவுக்கு வரி அதிகமாக உள்ளது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதைப் பற்றி கேட்டபோது, பஞ்சாலை தொழிலுக்கு தமிழக அரசு நிறைய ஆதரவு அளித்து வருகிறது என்றார். மலேசியா, எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இந்த கருத்தரங்கில் பலர் பங்கேற்கின்றனர்.



பருத்திக்கு இறக்குமதி வரி 11 சதவீதம் விதிக்கப்படுகிறது. பருத்தி விளைச்சல் அதிகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்தியாவில் 49 மாவட்டங்களில் பருத்தி விளைகிறது. அந்த மாவட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் பருத்தி உற்பத்தி 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பருத்திக்கும் கொடுக்க வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்திற்கு சில சலுகைகள் கொடுப்பதால் சில கார்மென்ட் நிறுவனங்கள் அங்கு சென்றுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு மத்திய பிரதேசத்தில் இருக்காது என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...