பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 10 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 12.08.2024 வரை விண்ணப்பிக்கலாம்.



கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. இதில் Chemical Sciences பிரிவுக்கு 2 மற்றும் Biological Sciences பிரிவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு Master's Degree in Chemical Sciences (Chemistry/ Biochemistry, Organic/ Analytical/ Environmental/ Biotechnology/ Microbiology/ Biochemistry) படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 28-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும்.

ஆய்வக உதவியாளர் பணிக்கும் 4 காலியிடங்கள் உள்ளன. Chemical Sciences மற்றும் Biological Sciences பிரிவுகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு Bachelors of Science in Chemistry Biotechnology/ Microbiology/ Biochemistry படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 25-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.17,000 வழங்கப்படும்.

Technical/ Support staff பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு அறிவு அவசியம். விண்ணப்பதாரர்களின் வயது 25-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.16,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://b-u.ac.in/ -ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

DIRECTOR, DRDO INDUSTRY ACADEMIA - CENTRE OF EXCELLENCE, BHARATHIAR UNIVERSITY [DIA-CoE BU], MARUTHAMALAI ROAD, COIMBATORE 641046, TAMILNADU.

விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...