மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான பாரம்பரியம் மிக்க மலை ரயில் சேவை ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு குன்னூர் வழியாக தினமும் காலை இயக்கப்படும் இந்த மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 1 முதல் 6 வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஆகஸ்ட் 6 அன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

தற்போது, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகள் இந்த அறிவிப்பினை கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...