கோவை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்குள்பட்ட தேசிய அளவில் சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை நேரு விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வரும் கால்பந்து பயிற்சி மாவட்ட மையத்தில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் Khelo India திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம் கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் முதல் 100 வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு நாள்தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த மையத்தில் பயிற்சியாளராக பணியாற்ற, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குள்பட்ட கால்பந்து வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்புவோர் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல, முற்றிலும் தற்காலிகமானதாகும். விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இப்பணிக்கு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு, கோவை மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும். உடல் தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...