தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற UPSC வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழா

கோவையில் நடைபெற்ற 'பாரதத்தை கட்டமைக்க: 2047 நோக்கி பயணம்' நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி UPSC வெற்றியாளர்களை பாராட்டி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். கிராமப்புற மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.



கோவை: யங் இந்தியன்ஸ் கோயம்புத்தூர் மற்றும் கோவை சம்பவி சம்கல்ப் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 'பாரதத்தை கட்டமைக்க: 2047 நோக்கி பயணம்' என்ற நிகழ்வு பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழகம் முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.



மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் யங் இந்தியன்ஸ் யுவா பிரிவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலும் ஊக்கமும் அளித்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சிறப்புரையில், "கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி இளைஞர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அவர்கள் அதிகாரிகளாக வரும் பொழுது அவர்கள் சார்ந்த பகுதிகளின் பிரச்சனைகளை உணர்ந்து அந்த மக்களின் வலிகளை உணர்ந்து செயல்படுவார்கள்" என்று கூறினார்.

மேலும், அவர் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். "நானும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று வந்துள்ளேன். மண்ணெண்ணெய் விளக்கில் படித்துள்ளேன். பள்ளிக்காக 8 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளேன். என்னுடைய கனவும், எனது பெற்றோர்களின் உழைப்பும் தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது" என்றார்.

ஆளுநர் ரவி, வெற்றி பெற்றவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். "வெற்றியை தலைக்கேற்றக்கூடாது. எப்போதும் பணிவோடு இருக்க வேண்டும். நமது வெற்றி என்பது தனிப்பட்ட வெற்றி கிடையாது. அது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என உணர வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, உடல் நலம், மன நலம், யோகா பயிற்சி, வாசிக்கும் பழக்கம், மன அழுத்தத்தை கையாளுதல், நிதி மேலாண்மை, சுய ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

இந்த தேசத்திற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது மிகவும் அவசியமாகும். எனவே செய்யும் பணியை முழு மனதோடு ஆர்வத்துடன் செய்ய வேண்டும். தொடர்ந்து படித்து அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சிவில் சர்வீஸ் பிரிவில் ஏராளமான வாய்ப்புகள் தற்போது உள்ளது. இந்திய அரசு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் இளைஞர்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் பலன்களை அனுபவிக்க நாங்கள் இருக்கப் போவதில்லை. இளைஞர்கள் தான் அந்த பலனை அனுபவிக்க போகின்றனர். இளைஞர்கள் தான் இந்த தேசத்தின் சொத்து. அந்த அடிப்படையில் இளைஞர்கள் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்' என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிவரும் இளைஞர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...