ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொவை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வு எடுக்க இந்த எஸ்டேட் வருவது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டை காவலாளிகள் மட்டுமே கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார். மற்றோரு காவலாளியான கிஷன் பகதூரும் படுகாயம் அடைந்தார். காவலாளிகள் இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.

நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கிஷன் பகதூரை கட்டிப் போட்டுவிட்டுச் சென்றதாகவும் கொடநாடு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவன் மறைவுக்குப் பின்பு அதிமுக-வில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. மேலும், இந்த கொடநாடு எஸ்டேட்டையும் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தினகரன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த கொலை, கொள்ளை முயற்சியின் போது நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என டிஐஜி தீபக் எம். தாமர் தலைமையில் 5 டிஎஸ்பி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...