சவுக்கு சங்கரை ஒருநாள் காவல் விசாரணைக்கு அனுமதித்த கோவை நீதிமன்றம்

கோவை நீதிமன்றம் யூடியூப்பர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் போலீசாரின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார்.



கோவை: கோவை குற்றவியல் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் யூடியூப்பர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர், "என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது" என்று ஆவேசமாக தெரிவித்தார்.



சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது  புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள். காவல் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் இருந்து  விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தோம். தேவர் பற்றி தவறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் அவ்வாறு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டாசை ரத்து செய்தது. சங்கர் பேட்டியில் பொது அமைதிக்கு எந்த குந்தமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுறைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது. எங்கே வெளியில் வந்துவிடுவோரோ என அனைத்து வழக்குகளிலும் அவசரமாக கைது செய்யப்பட்டார்." என்றார்.

"சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனு  நாளை விசாரணைக்கு வருகிறது. அதனால் அவசரமாக கைது காண்பிக்க ஆரம்பித்தார்கள். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு." என்றார்.

"ஜாமினில் சென்றவரை திரும்ப கைது செய்ய வேண்டும் என்பதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது. அதை அனைத்தையும் அவர்கள் பின்பற்றவில்லை. காவல்துறைக்கு புரிகின்ற பாஷையில் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றம் இவர்களுக்கு பதில் கூறும். காவல்துறையினர் தவறை தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா?" என்று தெரியவில்லை" என்றார்.

"எந்த பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக கூறினார்களோ,  அதே பெண் போலீஸ்காரர்களை வைத்து தண்ணீர் குடிக்க முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாமல் இருக்கும் அளவிற்கு அவர்களை சவுக்கு சங்கர் உடன் அனுப்புகிறார்கள். இது மனித உரிமை மீறல்.  சங்கர் தைரியமாக இருக்கிறார். போலீசார் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். போலீசார் எங்களை காப்பாற்றுங்கள் என எங்களிடம் கேட்கும் நிலைமையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்." என்றார்.

"பேரறிவாளன்  தாய் அற்புதம்மாளை போல  தற்போது கமலா அம்மா சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். திரும்பவும் இந்த அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் ஒரு விஷயத்தை கூறுகிறோம். நீங்கள் போடும் வழக்கு தூக்கு தண்டனை பெரும் வழக்கல்ல. ஐந்து வருடம் தண்டனை கிடைத்தாலும் திரும்பவும் வந்து சங்கர் பேசத்தானே போகிறார்கள். தண்டனை பெற்றாலும் திரும்பவும் வந்து அவர் பேசத்தான் போகிறார் அப்போது என்ன அவரை கொன்று விடுவீர்களா? எத்தனை நாட்கள் உள்ளே வைத்திருக்க முடியும்?சங்கரை மிரட்டலாம் என நினைத்தால் அது நடக்காது. எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும் அவர் பேசுவார் என வழக்கறிஞர் தெரிவித்தார்." என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...