உலக உறுப்பு தான தினம்: 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் 'Gift an Organ' கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு "Gift an Organ" கையெழுத்து இயக்கத்தை துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி கொண்டாடப்படும் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு உறுப்பு தான தினமான இன்று (ஆகஸ்ட் 13) 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் துவங்கப்பட்டுள்ள "Gift an Organ" என்ற கையெழுத்து இயக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் மருத்துவ பிரிவைச் சேர்ந்த Dr. சுப்புராஜா கூறுகையில், "ஆண்டுதோறும் இந்தியாவில், ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் உடல் உறுப்பு இல்லாமல் உயிரிழந்து வருகிறார்கள். மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் பட்சத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளை வைத்து 15 நபர்கள் வரை பாதுகாக்க முடியும்" என்றார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் சேர்மன் விஷ்ணு பிரபாகர் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளாக இந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறோம். இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணியை துவங்கி உள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் இந்த மாதம் முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...