கோவை மாவட்ட புதிய எஸ்பி Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்பு: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி

கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்றார். சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.



பல் மருத்துவராகவும் உதவி பேராசிரியராகவும் பணியாற்றிய Dr.கார்த்திகேயன், இந்திய குடிமையியல் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல் பணியில் இணைந்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்னர், தற்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.



பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய Dr.கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மோசடி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு குறித்து பேசிய அவர், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை புழக்கத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு குறித்து பேசிய Dr.கார்த்திகேயன், சாலை விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பொதுமக்களின் மனுக்கள் மீது பாரபட்சமின்றி விசாரித்து விரைவான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கேரளாவுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசினார். சோதனை சாவடிகளில் போலீஸ் பற்றாக்குறை மற்றும் சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். மோதல் கொலைகள் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பழைய வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் Dr.கார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...