உதகை குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளிக்கு சி.ஐ.எஸ் சர்வதேச அங்கிகாரம்


நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் முதலிடம் வகிக்கும் குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.



குறிப்பாக துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் ஆண்டு தோறும் இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

மேலும், இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே உதகை குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது. பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சுடும் உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் அனைத்து பயிற்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படும் நிலையில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்தியாவில் உள்ள சிறந்த சர்வேதேச பள்ளிகளில் குட்செப்பர்டு சர்வதேச பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் முதல் சர்வதேச பள்ளியாக (கவுன்சில் ஆப்இன்டர் நேசனல் பள்ளி) சி.ஐ.எஸ் சர்வதேச சான்றிதழ் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய புதுமையான கல்வி முறையை இப்பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக பயில இவ்விருது வழி வகை செய்யும் என குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த சர்வதேச அங்கிகாரம் பெற்றிருப்பதன் மூலம் சுதந்திரமான உலகளாவிய கல்வி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் திறம்பட கல்வி முறைகளை புதுப்பிக்கவும் முடியும்.

உலகத் தரமான கல்வி சர்வதேச திட்டங்களை இப்பள்ளி வழங்கும். 2010 ஆண்டில் இருந்து சி.ஐ.எஸ்-யில் உறுப்பினராக உள்ள குட்செப்ர்டு சர்வதேச பள்ளி இந்த சர்வதேச அங்கிகாரம் பெற மூன்று ஆண்டுகள் ஆனது. பல்வேறு சிறப்பான ஆய்வுகளுக்கு பிறகு சர்வதேச தர அங்கீகாரம் பெற்று குட்செப்பர்டு பள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...