செந்தில்பாலாஜி ஜாமின் மனு விசாரணை ஆகஸ்ட் 20-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆகஸ்ட் 20 அன்று முதல் வழக்காக இந்த மனுவை பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

செந்தில்பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், ஜாமின் மனு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...