EMRI-GHS நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் EMRI-GHS நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டவிரோத வேலை நேரம், அடிப்படை வசதிகள் இன்மை போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: EMRI-GHS நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் EMRI-GHS நிர்வாகத்தின் பெண் அதிகாரி தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சட்டவிரோத 12 மணி நேர வேலை, வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதியின்மை, வாய்மொழி உத்தரவாத பணியிட மாறுதல், பணி நீக்கம் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக, நிர்வாகத்தின் விசாரணை அதிகாரியாக உள்ள அம்மு, சட்டவிரோதமாக தொழிற்சங்க உறுப்பினர்களை தண்டிப்பதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



EMRI-GHS நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கையை கைவிடுதல், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்தல், விடுமுறை நாட்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்கள் முறையாக இயக்கப்படுதல், தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை அமைத்து தருதல், கோவை மாவட்ட நிர்வாக அதிகாரி விக்னேஷின் நேர்மையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டு முதற்கட்டமாக தென்காசி மற்றும் மதுரை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக இன்று கோவையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...