கோவையில் 78வது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி விழா தொடக்கம்

கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியேற்றி, காவல்துறையின் அணிவகுப்பை ஏற்று, மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பல்வேறு துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை வ.உ.சி மைதானத்தில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சுதந்திர தின விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், குழந்தைகளுடன் இணைந்து மூவர்ண பலூன்களை வானத்தில் பறக்கவிட்டார்.



விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 83 பேருக்கும், அரசு அலுவலர்கள் 140 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் மொழிப் போராட்டத் தியாகிகள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.



விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, வாஹா எல்லையில் காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இவ்வாறு கோவையில் 78வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...