மலைப்பாதையில் பழுதடைந்த உதகை ரயில்- சுற்றுலாப் பயணிகள் அவதி

உதகை மலை ரயில் மலைப்பாதையின் நடுக்காட்டில் பழுதாகி நின்றதால் சுமார் 8 மணி நேரம் உணவு மற்றும் தண்ணீரின்றி சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக மலை ரயில் செல்லும் ரம்மியமான அனுபவங்களைப் பெற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர்.

மேலும், தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்ட நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதும் நீலகிரி மலை ரயில் பயணமே.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் 282 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. ரயில், ஆர்டலி அருகே சென்றுகொண்டிருந்த போது எஞ்சின் உந்து சக்தி குறைவால் ரயில் மலைப்பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது. 

இதனைத்தொடர்ந்து, குன்னூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

முன்னதாக, சுமார் 8 மணி நேரம் நடுக்காட்டில் ரயில் பழுதாகி நின்றதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...